தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த சி.வி.சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ-க்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து அதிரடியாகப் பதவி நீக்கம் செய்துள்ளார். இந்த ஒழுங்கு நடவடிக்கை அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நீக்கம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர் நத்தம் விஸ்வநாதன், “யாராக இருந்தாலும் நீக்குவதே இவருக்குப் பழக்கமாகிவிட்டது” என்று எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், “கடைசியில் மறதிவாக்கில் அவரையே கட்சியிலிருந்து நீக்கி ஒருநாள் அறிவிப்பார்” என அவர் கிண்டலாகக் கூறியது செய்தியாளர்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியதுடன், உட்கட்சி மோதலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
