டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக விற்பனை செய்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த முறையான கண்காணிப்புப் பணிகளை அந்தந்த மாவட்ட மேலாளர்கள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும், இதில் ஏதேனும் சுணக்கம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது கூடுதல் விலை வசூலிப்பதைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் நிர்வாகம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
