அதிமுக அலுவலகம் எங்க கோவில்… அதுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது… சிவி சண்முகம் திட்டவட்டம்..!!

By Soundarya on வைகாசி 14, 2026

Spread the love

அதிமுக அலுவலகம் எங்களின் கோயில் போன்றது என்றும், அந்த புனிதமான இடத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட தாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சி.வி.சண்முகம் உறுதியாகத் தெரிவித்துள்ளார். அதிமுக தற்போது இரு அணிகளாகப் பிரிந்துள்ள சூழலில், கட்சி அலுவலகத்தில் அசம்பாவிதங்கள் தவிர்க்கும் பொருட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சியின் உரிமையை நிலைநாட்ட சட்டப் போராட்டம் நடத்தி வருவதைச் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய சி.வி.சண்முகம், “நாங்கள்தான் உண்மையான அதிமுக என்பதை சட்டப்பூர்வமாக நிரூபித்த பின்னரே முறைப்படி கட்சி அலுவலகத்திற்குள் நுழைவோம்” என்று குறிப்பிட்டார். தங்களது தரப்பால் கட்சி அலுவலகத்திற்கோ அல்லது அங்குள்ள உடமைகளுக்கோ எவ்வித சேதமும், பாதிப்பும் ஏற்படாது. அது எங்களின் கோவில். என அவர் உறுதி அளித்தார். உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் அவரது இந்த அறிக்கை அமைந்துள்ளது.