டாஸ்மாக்கில் மாறுகிறது ரூல்ஸ்… இனி இவர்களுக்கு மது கிடையாது… முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு..!!

By Soundarya on வைகாசி 14, 2026

Spread the love

தமிழ்நாட்டில் 21 வயது நிரம்பாதவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்று டாஸ்மாக் (TASMAC) நிர்வாகம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. விற்பனையாளர்களுக்கு மது வாங்க வருபவர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால், அவர்கள் ஆதார் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவுக்குள் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட புதிய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது