தமிழகச் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தரப்பால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது, அதிமுக சார்பில் எஸ்.பி. வேலுமணி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏ-க்களே எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சூழ்நிலையில், ஒரு கட்சிக்கு ஒருவருக்கு மட்டுமே பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்டமாகத் தெரிவித்த போதிலும், வேலுமணி தொடர்ந்து பேச முயன்றதால் அவையில் கடும் சலசலப்பு நிலவியது. உட்கட்சிப் பூசல்களும் அவை விதிகளும் மோதிக்கொண்ட இந்த நிகழ்வு, சட்டசபை நடவடிக்கைகளில் தற்காலிக முடக்கத்தை ஏற்படுத்தியதுடன் அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.
