BREAKING: CM விஜய் அதிரடி உத்தரவு… தமிழகத்தில் உடனடியாக மாற்றம்….!

By Nanthini on வைகாசி 12, 2026

Spread the love

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த முக்கிய மாற்றங்களின்படி, முதலமைச்சரின் மூன்றாம் முதன்மைச் செயலராக அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்; அதேபோல், நிதித்துறைச் செயலராக சித்திக் அவர்களும், சுற்றுலாத் துறைச் செயலராக ஸ்வர்ணா அவர்களும் புதிய பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.

குறிப்பாக, முன்னாள் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கியத் துறைகளில் பணியாற்றி வந்த உதயச்சந்திரன் மற்றும் அமுதா ஆகிய இருவரும் தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது அரசு வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள், தமிழக அரசு இயந்திரத்தில் புதிய வேகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.