“என்னை முதலமைச்சராக்க துடித்த திமுக, அதிமுக நிர்வாகிகள்” ரகசியத்தை உடைத்த திருமாவளவன்.. தமிழக அரசியலில் புதிய புயல்..!!

By Soundarya on வைகாசி 12, 2026

Spread the love

அதிமுக, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சிலர் தன்னை முதலமைச்சராக்க முயற்சிப்பதாகத் தகவல் வந்ததாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்தவிதமான திரைமறைவு பேரமும் நடைபெறவில்லை என்று தெளிவுபடுத்திய அவர், இடதுசாரி கட்சிகளைப் போலவே தானும் நிபந்தனையற்ற ஆதரவையே வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் விஜய் தன்னை மரியாதை நிமித்தமாகவே சந்திக்க வருவதாகவும், இந்தச் சந்திப்பின் போது எந்தவித நிபந்தனைகளையும் முன்வைக்கப் போவதில்லை என்றும் திருமாவளவன் கூறினார். இதனிடையே, திமுக – அதிமுக இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திகளே என்று திமுக தரப்பில் ஆர்.எஸ். பாரதி ஏற்கனவே மறுப்புத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.