BREAKING: தவெக எம்.எல்.ஏ-வுக்கு ஐகோர்ட் தடை… விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி…!

By Nanthini on வைகாசி 12, 2026

Spread the love

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகளை மறுவாக்கு எண்ணிக்கை செய்யக்கோரி திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, நாளை நடைபெறவுள்ள அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி பங்கேற்க நீதிமன்றம் அதிரடித் தடை விதித்துள்ளது.

இந்தத் தடையின் காரணமாக, சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய பலம் 120 என்ற எண்ணிக்கையிலிருந்து 119 ஆகக் குறைந்துள்ளது. முக்கியமான தருணத்தில் நீதிமன்றம் விதித்துள்ள இந்தத் தடையானது, நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பெரும் பரபரப்பாக உருவாக்கியுள்ளது.