Breaking: தங்கம் விலை ரூ.1840 உயர்வு… ஒரே நாளில் இவ்வளவு..? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!!

By Swetha on வைகாசி 12, 2026

Spread the love

தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹230 அதிகரித்து, ₹14,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விளைவாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரே நாளில் ₹1,840 உயர்ந்து, ₹1,14,640 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த வாரத்தில் தங்கம் விலை மந்தமாக இருந்த நிலையில், நேற்று சவரனுக்கு ₹400 குறைந்திருந்தது. ஆனால், இன்று எதிர்பாராத விதமாக விலை தலைகீழாக உயர்ந்துள்ளதால் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தத் திடீர் விலை ஏற்றம் நகை சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.