தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதுக்கோட்டை மத்திய மாவட்டச் செயற்குழு உறுப்பினரான சரவணன், ₹20 கோடி மோசடி புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிக லாபம் தருவதாகக் கூறி தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவர்களிடம் அவர் பணம் பெற்றுள்ளார். ஆனால், அவர் வாக்குறுதி அளித்தபடி லாபம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்த 49 பேர், இது குறித்து மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்ததன்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை திமுகவின் சமூக வலைதளப் பிரிவினர் (SM) கையில் எடுத்துத் தீவிரமாக விமர்சித்து வருவதால் தவெக கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு முக்கிய நிர்வாகி பண மோசடி வழக்கில் சிக்கியிருப்பது அக்கட்சியின் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
