“18 ஆண்டுகளுக்கு முன்” மதுரை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன..? விஜய்யின் அந்த பண்பு… சிலிர்த்துப்போன வைகோ..!!

By Soundarya on வைகாசி 12, 2026

Spread the love

தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், இன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை மேற்கொண்டார். முதற்கட்டமாக, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து விஜய் வாழ்த்து பெற்றார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் சமூகநீதி ஆகியவற்றைப் பாதுகாப்பேன் என்ற விஜய்யின் நிலைப்பாட்டிற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததாகக் கூறினார். மேலும், 1983-ல் விஜய்யின் தந்தை புதிய இல்லம் கட்டியபோது, அதன் திறப்பு விழாவில் தானும் கலைஞர் கருணாநிதியும் பங்கேற்ற நினைவுகளை விஜய்யிடம் பகிர்ந்துகொண்டார்.

   

விஜய்யின் பண்பு மற்றும் மரியாதையை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட வைகோ, 18 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் விஜய் தன்னைத் தேடி வந்து நலம் விசாரித்ததை நினைவுகூர்ந்தார். பின்னர் தான் வைகோவின் பேச்சுகளுக்குப் பெரும் ரசிகன் என்றும், விக்கிரவாண்டி மாநாட்டிற்குச் செல்வதற்கு முன்னதாக வைகோவின் உரைகளைத் திரும்பத் திரும்பக் கேட்டதாகவும் விஜய் கூறியது தன்னை நெகிழ்ச்சியடையச் செய்ததாக வைகோ தெரிவித்தார்.