மரணத்தின் விளிம்பில் மிரளவைக்கும் வீடியோ.. தண்டவாளத்தில் படுத்து உயிர்பிழைத்த பெண் – புனேவில் நடந்த திக் திக் நிமிடங்கள்..!!

By Swetha on வைகாசி 10, 2026

Spread the love

புனே மாவட்டம் பட்டாஸ் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அதே தண்டவாளத்தில் ஒரு சரக்கு ரயில் அதிவேகமாக வந்தது. நடைமேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் சிக்கிக்கொண்ட அந்தப் பெண்ணால் உடனடியாக மேலே ஏற முடியவில்லை. ரயில் மிக அருகில் வந்துவிட்டதைக் கண்ட அந்தப் பெண், பதற்றமடையாமல் சாதுர்யமாகச் செயல்பட்டு தண்டவாளத்தின் நடுவே குப்புறப் படுத்துக்கொண்டார்.

அதிவேகமாக வந்த சரக்கு ரயில் அந்தப் பெண்ணின் உடலுக்கு மேல் முழுவதுமாக கடந்து சென்றது. அங்கிருந்த பயணிகள் அனைவரும் அந்தப் பெண் உயிரிழந்திருப்பார் என்று அஞ்சி அலறினர். ஆனால், ரயில் முழுவதுமாக கடந்த பிறகு, அந்தப் பெண் எவ்விதக் காயமுமின்றி தண்டவாளத்தில் இருந்து எழுந்து நின்றார். இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ஆச்சரியத்திலும் நிம்மதியிலும் உறைந்து போயினர்.

   

இந்த அதிர்ஷ்டவசமான உயிர் தப்புதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “நிதானமே உயிரைக் காக்கும்” என்பதற்கு உதாரணமாக அந்தப் பெண்ணின் துணிச்சலான செயல் பேசப்பட்டாலும், தண்டவாளங்களைக் கடக்கும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், நடைமேம்பாலங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.