பெங்களூரைச் சேர்ந்த ஷிஃப்னாஸ் ஷெரீப் என்ற பெண், ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கிய கார்ப்பரேட் வேலையைத் துறந்து, தனது குடும்பத் தொழிலை ஏற்று நடத்திய உத்வேகம் அளிக்கும் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மென்பொருள் துறையில் ஒரு நல்ல நிலையில் இருந்த அவர், ஒரு கட்டத்தில் தனது வேலையில் மனநிறைவு இல்லாததை உணர்ந்தார். வெறும் சம்பளத்திற்காக வேலை செய்வதை விட, குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதில் அர்த்தம் இருப்பதாக அவர் கருதினார்.
தனது தந்தையின் காலணி வியாபாரத்தில ஆர்வம் காட்டிய ஷிஃப்னாஸ், கார்ப்பரேட் உலகில் தான் கற்ற மேலாண்மை திறன்களைத் தனது தொழிலில் புகுத்தினார். தொடக்கத்தில் பல சவால்களைச் சந்தித்தாலும், தனது விடாமுயற்சியால் குறுகிய காலத்திலேயே தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். “அதிக சம்பளம் தரும் வேலையை விட, நமக்குப் பிடித்தமான மற்றும் குடும்பத்திற்கு உதவும் வேலையே அதிக மகிழ்ச்சியைத் தருகிறது” என்று அவர் பகிர்ந்த கருத்துக்கள் பல இளைஞர்களுக்குப் பாடமாக அமைந்துள்ளன.
View this post on Instagram
இந்தச் செய்தி வைரலானதைத் தொடர்ந்து, பலரும் ஷிஃப்னாஸின் தைரியமான முடிவைப் பாராட்டி வருகின்றனர். தற்காலச் சூழலில் பலரும் கைநிறைய சம்பளம் கிடைக்கும் கார்ப்பரேட் வேலைகளைத் தேடி ஓடும் நிலையில், பாரம்பரிய தொழிலைப் புதுமைப்படுத்தி வெற்றி காண முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார். வாழ்க்கையின் நோக்கம் என்பது வெறும் ஊதியச் செக்கில் (Paycheck) மட்டும் இல்லை, நாம் செய்யும் வேலையின் ஆத்மார்த்தமான திருப்தியில் தான் உள்ளது என்பதை இவரது கதை உணர்த்துகிறது.
