“டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்… மாதம் ₹20,000 சம்பளம்… கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!!

By Muthu Mani on வைகாசி 9, 2026

Spread the love

ஈரோடு மாவட்டம் பர்கூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் (Field Assistant) பணியிடத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருப்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 01.05.2026 அன்று விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்குத் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.20,000 சம்பளமாக வழங்கப்படும்.

இந்தப் பணியிடத்திற்குத் தகுதியானவர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வு (Walk-in Interview) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் 18.05.2026 அன்று ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா, பர்கூரில் உள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையத்திற்கு (Bargur Cattle Research Station) நேரில் சென்று நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். அரசுப் பணி தேடுபவர்களுக்கும், களப்பணியில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.