“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

By Swetha on வைகாசி 7, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 112 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரியுள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபித்த பின்னரே அவர் முதலமைச்சராகப் பதவியேற்க முடியும் என ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பிடிவாதம் காட்டி வருகிறார். விஜய்க்குத் தேவையான பெரும்பான்மைக்கு இன்னும் 5 எம்.எல்.ஏ-க்கள் தேவைப்படும் நிலையில், ஆளுநரின் இந்த நிபந்தனை அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவற்றுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின் முடிவில், இந்தக் கட்சிகள் அனைத்தும் திமுக கூட்டணியிலேயே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இக்கட்சிகளைத் தனது பிடிக்குள் வைத்திருப்பதன் மூலம், தவெக பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளை ஸ்டாலின் தந்திரமாகத் தடுத்துள்ளார்.

   

விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு ஒருபுறம் ஆளுநரின் நிபந்தனைகளும், மறுபுறம் திமுகவின் அரசியல் நகர்வுகளும் பெரும் சவாலாக மாறியுள்ளன. விசிக தலைவர் திருமாவளவன், விஜய்க்குப் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறினாலும், ஆளுநரின் முடிவில் பாஜகவின் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதனால், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும் ஆட்சி அமைக்க முடியாமல் ‘அங்குட்டு ஆளுநர், இங்குட்டு ஸ்டாலின்’ என விஜய் இக்கட்டான நிலையில் தவித்து வருகிறார்.