நடிகர் விஜய் தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கும் வேளையில், ஒரு படத்திற்கு சுமார் 275 கோடி ரூபாய் வரை ஊதியமாகப் பெறுகிறார். கோடிக்கணக்கான ரசிகர்களையும், பிரம்மாண்டமான வருமானத்தையும் அள்ளித்தரும் சினிமா துறையை முழுமையாகத் துறந்துவிட்டு, அவர் தற்போது ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியின் மூலம் தீவிர அரசியலில் களம் இறங்கியுள்ளார். சினிமா வருமானத்துடன் ஒப்பிடுகையில் அரசியல் வாழ்வு என்பது நிதி ரீதியாக அவருக்குப் பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சரின் மாதச் சம்பளம் சுமார் 2.05 லட்சம் ரூபாய் மட்டுமே. இதில் அடிப்படைச் சம்பளம், இதர படிகள் மற்றும் சலுகைகள் அடங்கும். ஒரு படத்தில் நடிப்பதன் மூலம் விஜய் ஈட்டும் வருமானத்தை, ஒரு முதலமைச்சர் தனது வாழ்நாள் முழுவதும் சம்பளமாகப் பெற்றாலும் ஈடுகட்ட முடியாது என்பதே நிதர்சனம். இவ்வளவு பெரிய பொருளாதார வித்தியாசத்தைப் பொருட்படுத்தாமல் அவர் அரசியலுக்கு வருவது அவரது ஆதரவாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருமானத்தை விட மக்கள் சேவையே முக்கியம் என்ற நோக்கில் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. “நிமிர்ந்து நில், துணிந்து நில்” என்ற கொள்கையோடு, ஊழலற்ற அரசியலை முன்னெடுக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். அதிக ஊதியம் தரும் திரையுலகை விட்டுவிட்டு, குறைந்த ஊதியம் கொண்ட பொதுவாழ்வைத் தேர்ந்தெடுத்திருப்பது, அவரது அரசியல் பயணத்தின் மீதான அர்ப்பணிப்பைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
