தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவையும் சேர்த்து தவெக வசம் மொத்தம் 112 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. இது ஆட்சி அமைக்கத் தேவையான மேஜிக் நம்பரை விடக் குறைவாக இருப்பதால், விஜய்க்கு இது ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
பெரும்பான்மை பலம் குறைவாக உள்ளதால், திட்டமிட்டபடி நாளை விஜய்யின் முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெறுமா என்பதில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. ஆளுநரின் இந்த நிபந்தனையால் தவெக தரப்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை எட்டாத பட்சத்தில், பதவியேற்பு விழா தள்ளிப்போகலாம் அல்லது அரசியல் ரீதியாகப் புதிய திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
