மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தொண்டர்களால் தான் தாக்கப்பட்டதாகக் கூறி, தலையில் பெரிய கட்டுடன் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தான் கடுமையாகத் தாக்கப்பட்டதாக அந்தப் பெண் அழுதுகொண்டே விவரித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது தலையில் இருந்த கட்டு தானாகவே கீழே சரிந்து விழுந்தது.
கட்டு விழுந்த அடுத்த நொடி, அந்தப் பெண்ணின் தலையில் எந்தவிதமான காயமோ அல்லது தழும்புகளோ இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ‘லைவ்’ பேட்டியின் போதே அந்தப் பெண்ணின் நாடகம் அம்பலமானதால், அவர் உடனடியாகக் கட்டைச் சரி செய்ய முயன்றார். ஆனால் அதற்குள் அந்தச் சம்பவம் கேமராவில் பதிவாகிவிட்டது.
A TMC worker with bandage on her head claimed that she was beaten up by BJP workers.
BJP workers removed the bandage but there was no sign of injury.
So, they beat her up and returned the bandage and told her that people will believe you now. pic.twitter.com/t0zP9FcfZt
— Incognito (@Incognito_qfs) May 5, 2026
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “ஓவர் ஆக்டிங்கிற்கு 50 ரூபாயைக் குறைக்கவும்” (Overacting ka 50 kaato) என்ற புகழ்பெற்ற மீம் வசனத்தைப் பதிவிட்டு அந்தப் பெண்ணைக் கிண்டல் செய்து வருகின்றனர். அரசியல் லாபத்திற்காகப் போலியான காயங்களை உருவாக்கி நாடகமாடிய அந்தப் பெண்ணின் செயல் தற்போது இணையத்தில் பெரிய சிரிப்பலைகளையும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.
