நீச்சல் தெரியாதவர்கள் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்தால், உயிர் பிழைப்பதற்கான எளிய மற்றும் மிக முக்கியமான நுட்பம் குறித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. நீச்சல் தெரியவில்லை என்றாலே பயத்தில் கைகால்களை அடித்துக்கொண்டு மூழ்கிவிடாமல், அமைதியாக இருந்து உடலை மிதக்க வைப்பது எப்படி என்பதை இந்த வீடியோ விளக்குகிறது.
இந்த உயிர் காக்கும் நுட்பத்தில், தண்ணீரில் விழுந்தவுடன் பயப்படாமல் மல்லாக்கப் படுத்து தலையைப் பின்னோக்கி சாய்த்து, நுரையீரலில் காற்றை நிரப்பி மூச்சை ஆழமாக இழுத்து விடுவதன் மூலம் உடல் ஒரு படகு போல தண்ணீரில் மிதக்கும். கைகளையும் கால்களையும் மெதுவாக அசைப்பதன் மூலம் மூழ்காமல் நீண்ட நேரம் நீரிலேயே இருக்க முடியும் என்பதை இது செயல்முறை விளக்கமாக காட்டுகிறது.
View this post on Instagram
பேரிடர் காலங்களிலும், நீர்நிலைகளுக்குச் செல்பவர்களுக்கும் இந்த ‘தண்ணீர் உயிர்வாழும் நுட்பம்’ மிகவும் அவசியமானது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த எளிய நுட்பத்தை அறிந்துகொள்வதன் மூலம் நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளைப் பெருமளவு தவிர்க்க முடியும் என்பதால் இந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
