மனிதநேயத்தை மிஞ்சிய அன்பு.. அழுதுகொண்டிருந்த சிறுமி… குரங்கு செய்த அந்த செயல்.. இணையத்தை நெகிழ வைத்த வீடியோ…!

By Swetha on வைகாசி 5, 2026

Spread the love

அழுதுகொண்டிருக்கும் ஒரு சிறுமிக்கு குரங்கு ஒன்று ஆறுதல் கூறும் காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தச் சிறுமி சோகமாக அழுது கொண்டிருப்பதைப் பார்த்த குரங்கு, அவரிடம் சென்று அவரது கண்ணீரைத் துடைத்துத் தேற்ற முயல்கிறது.

பொதுவாக விலங்குகள் மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவை என்பதற்குச் சான்றாக இந்த வீடியோ அமைந்துள்ளது. அந்த குரங்கு சிறுமியின் அருகே அமர்ந்து, அவரை அணைத்துக் கொள்வதும், தலையை வருடிக்கொடுப்பதும் மனிதர்களுக்கே உரிய அன்பையும் பரிவையும் பிரதிபலிப்பதாக உள்ளது.

   

   

இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்ட சில நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது. “மனிதர்களை விட விலங்குகளிடம் அன்பு அதிகம்” எனப் பலரும் இந்த வீடியோவை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து, அந்த குரங்கின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.