“அதிமுக கூட்டணியில் பாமக கெத்து.. பாஜக, அமமுக பரிதாபம்?… 2026 தேர்தல் முடிவுகளில் வெளியாகும் அதிரடித் திருப்பம்”…!!!

By Muthu Mani on வைகாசி 4, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையே கலவையான முடிவுகள் கிடைத்து வருகின்றன. அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, 5 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக தருமபுரி, பென்னகரம், ஜெயங்கொண்டம், சோலிங்கர் மற்றும் செஞ்சி ஆகிய தொகுதிகளில் பாமக வேட்பாளர்கள் தங்களது செல்வாக்கை நிலைநாட்டி முன்னிலை வகித்து வருவது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான அமமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. 11 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, மன்னார்குடி தொகுதியில் மட்டும் எஸ்.காமராஜ் மூலம் முன்னிலையில் உள்ளது. அதேபோல், அதிகப்படியாக 27 தொகுதிகளில் களம் கண்ட பாஜக, தற்போது வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக ஓரளவு கணிசமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், மற்ற தோழமைக் கட்சிகள் சொற்ப இடங்களிலேயே முன்னிலையில் இருப்பது தேர்தல் களத்தில் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.