தேர்தல் முன்னிலை நிலவரங்களில் திமுக பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் போடப்பட்டிருந்த பந்தல்கள் பிரிக்கப்பட்டன. இந்தச் சூழலில், அங்கிருந்த திமுக தொண்டர் ஒருவர், “புதுசா வந்தவரை (விஜய்) தூக்கிவச்சு கொண்டாடுறீங்களே…” என்று குமுறி அழுதுள்ளார். பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த தங்களை விட்டுவிட்டு, புதிய வரவான விஜய்யின் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதைக் கண்டு அவர் கண்ணீர் விட்டுள்ளார்.
“புதுசா வந்தவர தூக்கிவச்சு..” அண்ணா அறிவாலயத்தில் கண்கலங்கி கதறி அழுத திமுக தொண்டர்..! #thanthitvelectionresults2026 | #TNElectionresults | #tamilnaduelectionresult | #ElectionResult | #AssemblyElectionResult | #AssemblyElection2026 | #AssemblyElectionLiveUpdates pic.twitter.com/ck3SjI1qSj
— Thanthi TV (@ThanthiTV) May 4, 2026
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தனது முதல் தேர்தலிலேயே திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கும் கடும் சவாலை அளித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்களின் வாக்குகள் விஜய்யின் பக்கம் சாய்ந்திருப்பதே திமுக தொண்டர்களின் இந்த ஆதங்கத்திற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளின் ஆரம்பக் கட்டத்திலேயே திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இடங்களில் டிவி-கே முன்னிலை பெற்று வருவது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
