கூட்டணி இல்லை.. ஆனாலும் முதலிடம்..! ஓட்டப்பிடாரத்தில் தனி ஒருவனாக மாஸ் காட்டும் கிருஷ்ணசாமி..!!

By Soundarya on வைகாசி 4, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தற்போதைய வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளார். எந்தவொரு பெரிய கூட்டணியிலும் இணையாமல் தனித்து களம் கண்ட அவர், தனது கட்சியின் சின்னமான சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டு இந்த வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறார்.

அரசியல் களத்தில் பலமான போட்டியாளர்களாகக் கருதப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் ஆளும் கட்சியான திமுக ஆகிய நான்கு வேட்பாளர்களையும் பின்னுக்குத் தள்ளி கிருஷ்ணசாமி முன்னிலை பெற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனித்து நின்றாலும் மக்கள் செல்வாக்குடன் அவர் காட்டி வரும் இந்த அதிரடி முன்னிலை, ஓட்டப்பிடாரம் தொகுதி முடிவுகளில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.