12-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்…!! கை நிறைய சம்பளத்தில் மத்திய அரசில் வேலை… மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க…!!

By Devi Ramu on வைகாசி 3, 2026

Spread the love

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள 731 சுருக்கெழுத்தாளர் (Stenographer Grade ‘C’ & ‘D’) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கிரேடு ‘சி’ பதவிக்கு 18 முதல் 30 வயது வரையிலும், கிரேடு ‘டி’ பதவிக்கு 18 முதல் 27 வயது வரையிலும் உள்ளவர்கள் தகுதியுடையவர்கள். ஆர்வமுள்ளவர்கள் மே 15, 2026-க்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கான போட்டித் தேர்வு கணினி அடிப்படையில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உட்பட 9 மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது. விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ssc.gov.in என்ற இணையதளம் அல்லது ‘MySSC’ மொபைல் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு மத்திய அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.