ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்…! ரூ.7,500 ஆக உயரும் குறைந்தபட்ச பென்ஷன்…? மத்திய அரசின் பலே திட்டம்…!!

By Devi Ramu on வைகாசி 3, 2026

Spread the love

இந்தியாவில் இபிஎப்ஓ (EPFO) திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத் தொகையான ரூ.1,000-ஐ, ரூ.7,500 ஆக உயர்த்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. விலைவாசி உயர்வு மற்றும் மருத்துவச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த உயர்வை வழங்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நாடாளுமன்றக் குழுவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் விரைவில் சாதகமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டமானது நடைமுறைக்கு வந்தால், EPS-95 பிரிவின் கீழ் வரும் லட்சக்கணக்கான தனியார் துறை ஓய்வூதியதாரர்கள் பெரும் நிதிப் பயனை அடைவார்கள். இதனுடன், வருங்கால வைப்பு நிதிக்கு (PF) 8.25% வட்டி வழங்கவும், ஏடிஎம் மூலம் எளிதாகப் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தவும் இபிஎப்ஓ திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் மூலம் பணப் பரிவர்த்தனைகள் வேகப்படுத்தப்பட்டுள்ள சூழலில், இந்த பென்ஷன் உயர்வு முதியவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.