தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால், தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு பெண் சபாநாயகரைத் தேர்வு செய்வது குறித்து திமுக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவிடாமல் திமுக தடுத்ததாக முன்பு பாஜக முன்வைத்த குற்றச்சாட்டுகளைப் பொய்யாக்கும் விதமாக இந்த நடவடிக்கையை எடுக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த ஆலோசனையின் மூலம் பெண்களுக்கு அதிகாரத்தில் முக்கியத்துவம் அளிப்பதையும், சமூக நீதி மற்றும் பாலின சமத்துவத்தில் திமுக கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்த அக்கட்சி முயல்கிறது. இதுவரை தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு பெண் கூட சபாநாயகர் பதவியை வகிக்காத நிலையில், திமுகவின் இந்த உத்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
