அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் ஒரு போர் தொடங்குவதற்கான சூழல் நிலவி வருவதாக ஈரான் ராணுவம் பகீர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்கா எந்தவொரு சர்வதேச உடன்படிக்கையையோ அல்லது ஒப்பந்தத்தையோ முறையாக மதிப்பதில்லை என்றும், அந்நாடு ஏதேனும் முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட முயன்றால் அதை எதிர்கொள்ள ஈரான் ராணுவம் முழுத் தயார் நிலையில் இருப்பதாகவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாகப் பதற்றம் நிலவி வரும் சூழலில், தற்போது ஈரான் ராணுவம் விடுத்துள்ள இந்த நேரடி எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் போக்காக மாறினால் அது உலகப் பொருளாதாரத்திலும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் உலக நாடுகள் இந்த நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
