மருமகளை அறையில் வைத்துப் பூட்டி, மாமனார் மற்றும் மாமியார் கொடூரமாகத் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அவர்கள், மருமகளை ஒரு அறைக்குள் தள்ளிப் பூட்டியுள்ளனர்.
அங்கு வைத்து அவரைத் தடிகளால் தாக்கியதுடன், கால்களால் உதைத்தும், கைகளால் சரமாரியாகக் குத்தியும் சித்திரவதை செய்துள்ளனர். இந்தத் தாக்குதலின் போது, அந்தப் பெண் அணிந்திருந்த தங்க நகைகளையும் அவர்கள் வலுக்கட்டாயமாகப் பறித்துச் சென்றுள்ளனர்.
https://x.com/th_anonymouse/status/2050220995915796823?s=20
இந்தக் கொடூரமான தாக்குதலில் இருந்து எப்படியோ தப்பித்து வெளியே வந்த அந்தப் பெண், தற்போது உதவி கோரி புகார் அளித்துள்ளார். குடும்ப உறவுகளுக்குள்ளேயே இத்தகைய வன்முறை அரங்கேறியிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
