“என் புருஷன் உனக்கு; உன் புருஷன் எனக்கு…” கோர்ட்டில் டீல் பேசிய சகோதரிகள்…. மிரண்டு போன நீதிமன்றம்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

By Devi Ramu on வைகாசி 2, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், உடன்பிறந்த சகோதரிகள் இருவர் தங்களின் கணவர்களை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ள விருப்பம் தெரிவித்த விசித்திரமான சம்பவம் நீதிமன்றத்தை அதிர வைத்துள்ளது. முதலில் இது ஒரு கடத்தல் வழக்காகவே நீதிபதிகள் முன் வந்தது. தனது மனைவியை மைத்துனர் கடத்திச் சென்றுவிட்டதாக ஒரு நபர் புகார் அளித்திருந்தார். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜரான அந்தப் பெண், தான் கடத்தப்படவில்லை என்றும், தனது விருப்பப்படியே தங்கையின் கணவருடன் வாழ்வதாகவும் கூறி அதிர்ச்சியளித்தார்.

இந்த வழக்கின் திருப்பமாக, அந்த பெண்ணின் தங்கையும், தனது அக்கா தன் கணவருடன் வாழ்வதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தார். மேலும், தானும் தனது அக்காவின் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகக் கூறி, ‘கணவர் எக்ஸ்சேஞ்ச்’ திட்டத்தை முன்மொழிந்தார். இரு பெண்களும் மேஜர் என்பதால், இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் எனக் கூறி கடத்தல் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்டப்படி தடையற்ற முடிவாக இருந்தாலும், சமூகக் கட்டமைப்பு மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இச்சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.