BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்வு… சவரன் ரூ.1,12,000-க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!!

By Soundarya on வைகாசி 2, 2026

Spread the love

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 2) அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு மொத்தம் 1,440 ரூபாய் வரை குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் விலை ஏறுமுகத்தைக் கண்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 640 ரூபாய் உயர்ந்து 1,12,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை 80 ரூபாய் அதிகரித்து 14,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது; ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் உயர்ந்து 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 5,000 ரூபாய் உயர்ந்து 2,70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் திடீர் விலை உயர்வு நகை வாங்குவோரிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.