“கருப்புச் சட்டை போட்ட திருடன் வந்தான்” அப்புறம் அம்மாவை கொன்னுட்டான்…. குழந்தைகள் சொன்ன பொய்… அப்பா தான் எல்லாமே சொன்னாரு… கடைசியில் போலீசுக்கு காத்திருந்த பயங்கர டுவிஸ்ட்…!!

By Soundarya on வைகாசி 2, 2026

Spread the love

மீரட்டில் அதிகாலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கௌசர் என்ற புதுப்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெற்றிகரமாகத் துப்பறிந்துள்ளனர். இந்தக் கொடூரக் கொலையைச் செய்தது கௌசரின் கணவன் சாகிப் என்பது விசாரணையில் அம்பலமானது. கொலையைச் செய்த பிறகு அங்கிருந்து தப்பிச் சென்ற சாகிப், தனது குழந்தைகளிடம் “கருப்பு உடை அணிந்த திருடன் ஒருவன் வந்து அம்மாவைக் கொன்றுவிட்டான்” என்று பொய்யான தகவலைக் கூறி மூளைச்சலவை செய்துள்ளான். காவல்துறையினரிடமும் அந்த அப்பாவி குழந்தைகள் தந்தை சொல்லிக் கொடுத்ததையே கூறியுள்ளனர்.

காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் சாகிப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொலையினை மறைக்க சாகிப் தனது வீட்டிலேயே மறைத்து வைத்திருந்த ரத்தம் படிந்த பேப்பர் கட்டர் (Paper cutter) ஆயுதத்தை காவல்துறையினர் மீட்டெடுத்தனர். தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சாகிப்பின் நாடகம் போலீசாரிடம் எடுபடாமல் போனது.

   

சாகிப்பிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததே இந்த கொலைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. தனது கள்ளக்காதலை மனைவி கௌசர் தொடர்ந்து எதிர்த்து வந்ததால், அவரை ஆத்திரத்தில் சாகிப் கொலை செய்துள்ளான். தனது காதலியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில், தனது மனைவியையே தீர்த்துக்கட்டிய கணவனின் இந்தச் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.