“நான் கவர்ன்மென்ட் ஸ்டாஃப்..” புனித கங்கையில் நாயை குளிப்பாட்டி அராஜகம் செய்த பெண்…. கொந்தளித்த பக்தர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on வைகாசி 2, 2026

Spread the love

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள புனிதமான ஸ்ரத்தானந்த் காட்டில், பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயைக் குளிப்பாட்டிய சம்பவம் பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை ஒரு அமைச்சகத்தின் ஊழியர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட அந்தப் பெண், புனிதத் தீர்த்தத்தில் நாயைக் குளிப்பாட்டக் கூடாது என்று அங்கிருந்தவர்கள் தடுத்தும் அதனைப் பொருட்படுத்தவில்லை. அங்கிருந்த பக்தர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன், அவர்களை ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டது அந்தப் பெண்ணின் அராஜகப் போக்கைக் காட்டுவதாக அமைந்தது.

புனிதத் தலங்களின் மாண்பைக் கெடுக்கும் வகையில் நடந்துகொண்ட அந்தப் பெண்ணின் செயல் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அரசு அதிகாரம் அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி இது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பெண் தனது தவறை உணரும் வகையில் சட்டப்படியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.