“டிகிரி முடித்திருந்தால் போதும்!… மத்திய அரசு நிறுவனமான BPCL-லில் 248 காலிப்பணியிடங்கள்…. ரூ. 1.40 லட்சம் வரை சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க”…!!

By Muthu Mani on வைகாசி 2, 2026

Spread the love

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், அசோசியேட் எக்சிகியூட்டிவ் மற்றும் செகரட்டரி ஆகிய பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 248 காலியிடங்கள் உள்ள இந்த வேலைக்குத் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிப்ளமோ, பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி, எம்.எஸ்.சி அல்லது சிஏ/சிஎம்ஏ போன்ற கல்வித்தகுதிகளைப் பெற்றிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சிறப்பான ஊதியம் வழங்கப்படும்.

இந்த வேலைக்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,180 நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இருப்பினும் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் ஏதுமில்லை. விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் மே 17, 2026-க்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் இணையதளமான https://www.bharatpetroleum.in/ என்ற முகவரியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.