உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில், பல லட்சம் ரூபாய் செலவு செய்து கோலாகலமாக நடந்த ஒரு திருமணம், தற்போது வெளிவந்துள்ள பகீர் உண்மையால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இளம் பெண் பொறியாளராகப் பணிபுரியும் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் முடிந்து ஒரு ஆண்டு காலம் ஆகியும், அந்த நபர் தனது மனைவியைத் தொடக்கூட இல்லை. உடலுறவோ அல்லது குறைந்தபட்ச அன்பையோ கூட அவர் காட்டாமல், மனைவியிடம் இருந்து தொடர்ந்து உடல் ரீதியான இடைவெளியைப் பராமரித்து வந்துள்ளார்.
இன்றைய காலத்தில் ஆண்கள் உறவு கொள்ளத் துடிக்கும் நிலையில், தனது கணவர் ஏன் தன்னைத் தீண்டுவதற்குக் கூட மறுக்கிறார் என்ற சந்தேகம் அந்தப் பெண்ணுக்கு எழுந்தது. கணவரின் நடத்தை மீது சந்தேகம் வலுக்கவே, ஒரு அதிரடி முடிவை எடுத்த அந்தப் பெண், தனது கணவர் அறியாமல் அறையில் ஒரு ரகசியக் கேமராவை (Hidden Camera) பொருத்தினார். அந்த ரகசியக் கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, அந்தப் பெண் அப்படியே உறைந்து போனார்.
அந்த கேமரா காட்சிகளில், கணவர் ஒரு ஆணாதிக்கச் சிந்தனை கொண்டவரோ அல்லது சாதாரணமானவரோ அல்ல, மாறாக அவர் ஓரினச்சேர்க்கையாளர் (Gay) என்பதும், மற்றொரு ஆணுடன் ரகசியத் தொடர்பில் இருப்பதும் அம்பலமானது. இந்த உண்மையை அறிந்த அந்தப் பெண், தன்னை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பல கனவுகளுடன் புகுந்த வீட்டிற்குச் சென்ற பெண்ணின் வாழ்க்கை, கணவரின் இந்த ரகசியப் பக்கத்தால் சீரழிந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
