பணம் டபுள் ஆகணுமா…? போஸ்ட் ஆபீஸில் ரூ.5 லட்சம் போட்டா ரூ.10 லட்சம் கிடைக்கும்…! மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!

By Devi Ramu on வைகாசி 1, 2026

Spread the love

மத்திய அரசின் உத்தரவாதம் கொண்ட ‘கிசான் விகாஸ் பத்திரம்’ (KVP) திட்டம், பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். தபால் நிலையங்கள் மூலம் வழங்கப்படும் இத்திட்டத்திற்கு தற்போது 7.5% வட்டி வழங்கப்படுகிறது; இதில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை சரியாக 115 மாதங்களில் (9 ஆண்டுகள் 7 மாதங்கள்) இரண்டு மடங்காக உயரும். உதாரணமாக, ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் எவ்வித சந்தை அபாயமும் இன்றி ரூ.10 லட்சத்தை முழுமையாகப் பெற முடியும்.

18 வயது பூர்த்தியான எவரும் குறைந்தபட்சம் 1,000 ரூபாயிலிருந்து இத்திட்டத்தில் சேரலாம், இதற்கு அதிகபட்ச வரம்பு ஏதுமில்லை. அவசரத் தேவைகளுக்காக முதலீடு செய்த 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு பணத்தைத் திரும்பப் பெறும் வசதியும், இந்தச் சான்றிதழை அடமானம் வைத்து வங்கிக் கடன் பெறும் வசதியும் உள்ளது. நாட்டின் எந்த தபால் நிலையத்திலும் கணக்கைத் தொடங்கி, தேவைப்பட்டால் வேறு கிளைக்கு மாற்றிக்கொள்ளும் வசதி இருப்பதால் இது நடுத்தர வர்க்கத்தினருக்குப் பாதுகாப்பான சேமிப்பாகத் திகழ்கிறது.