BREAKING: “ரிசல்ட் நாளில் இதுதான் நடக்கும்”… மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை… அமைச்சர்களுக்கு முதல்வர் போட்ட ஆர்டர்…!

By Nanthini on சித்திரை 30, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டைத் தொடர்ந்து மாநில அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ள சூழலில், கொடைக்கானல் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த முக்கியக் கூட்டத்தில், அண்மையில் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு (Exit Poll) முடிவுகள், திமுகவின் வெற்றி வாய்ப்புகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக, வாக்கு எண்ணிக்கை மையங்களில் திமுக முகவர்கள் எவ்வித தொய்வுமின்றி மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், முறைகேடுகளுக்கு இடமளிக்காத வகையில் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சிகளின் வியூகங்களை முறியடித்து வெற்றியை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை அவர் வழங்கியிருப்பது திமுக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.