வெயிலுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிய மக்கள்…!! ஸ்விக்கியில் எகிறும் ‘9 மணி டிரெண்ட்’ ஆர்டர்கள்…! வெளியான ஷாக்கிங் தகவல்…!!

By Devi Ramu on சித்திரை 30, 2026

Spread the love

இந்தியாவில் தற்போது வாட்டி வதைக்கும் கடும் வெயில் காரணமாக, மக்களின் பொருட்களை வாங்கும் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. காலை முதல் மாலை வரை வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுவதால், இரவு 9 மணிக்கு மேல் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்யும் ‘9 மணி டிரெண்ட்’ புதிய பழக்கமாக உருவாகியுள்ளது. மார்ச் மாதத்திலிருந்து குளிர்பானங்கள் மற்றும் மாம்பழங்களுக்கான தேவை வாரத்திற்கு 300 சதவீதம் அதிகரித்து வரும் நிலையில், இரவு நேரங்களில் ஐஸ்கிரீம் விற்பனை வழக்கத்தை விட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது

இந்தக் கோடையில் மக்கள் அதிகம் தேடும் பொருட்களின் பட்டியலில் தயிர் முதலிடத்தைப் பிடித்துள்ளது; இதனைத் தொடர்ந்து குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குறிப்பாக பெங்களூரு நகரில்தான் அதிகப்படியான ஐஸ்கிரீம் ஆர்டர்கள் பதிவாகியுள்ளன. சென்னை, மும்பை போன்ற பெருநகரங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் மதுரை மற்றும் திருச்சி போன்ற நகரங்களிலும் 200 சதவீதத்திற்கும் மேலாக ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க மக்கள் நீர்ச்சத்துள்ள பழங்களையும், குடும்பமாகச் சேர்ந்து உண்ணும் பெரிய ஐஸ்கிரீம் டப்பாக்களையும் ஆன்லைன் மூலம் அதிகளவில் வாங்குவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.