சரணடைவதா..? சண்டையிடுவதா..? ட்ரம்ப்பின் ‘மரணப் பொறி’யை உடைக்கப்போகும் ஈரான்: மத்திய கிழக்கில் உச்சகட்ட போர் பதற்றம்..!!

By Soundarya on சித்திரை 30, 2026

Spread the love
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானிய துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகை (Naval Blockade) அறிவித்ததை பேச்சுவார்த்தை மேசையை “சரணடைதல் மேசையாக” மாற்றும் முயற்சி என்று கடுமையாகச் சாடியுள்ளார். முற்றுகை மூலம் ஈரானை பணியவைக்க ட்ரம்ப் திட்டமிடுவதாகவும், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் ஒப்புக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கடற்படை முற்றுகை தொடர்ந்தால், ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் மூடிவிடும் என்றும், கப்பல் போக்குவரத்து ஈரானின் கட்டுப்பாட்டில் மட்டுமே நடக்கும் என்றும் காலிபாப் எச்சரித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் போர்க்களத்தில் புதிய வியூகங்களை வெளிப்படுத்த ஈரான் தயாராகிவிட்டதாகவும், ட்ரம்பின் அறிக்கைகளை “ஊடகப் போர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த பதற்றம் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 140 டாலர் வரை உயரும் என்றும், இது அமெரிக்க நுகர்வோரை பாதிக்கும் என்றும் கூறி ட்ரம்பின் நடவடிக்கையை காலிபாப் சமூக வலைதளங்களில் கேலி செய்துள்ளார்.