பட்டப்பகலில் பயங்கரம்… முன்னாள் காதலனின் வெறிச்செயல்.. குழந்தையைக் காப்பாற்ற போராடிய 17 வயது தாய்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்… அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!

By Muthu Mani on சித்திரை 29, 2026

Spread the love

பிரேசிலில் 17 வயதேயான இளம் தாய் ஒருவர், தனது கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு தெருவில் நடந்து சென்றபோது, 36 வயதான அவரது முன்னாள் காதலன் பின்னால் இருந்து பயங்கர ஆயுதத்தால் அவரைத் தாக்கியுள்ளார். அந்த நபர் இளம்பெண்ணின் உடலில் பலமுறை பலமாகத் தாக்கிய நிலையிலும், அந்தத் தாய் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் தனது குழந்தையை அரணாகப் பிடித்துக் கொண்டு பாதுகாத்துள்ளார். தாயின் இந்த வீரமான போராட்டத்தால், அதிர்ஷ்டவசமாக அந்தப் பிஞ்சு குழந்தைக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு அங்கிருந்து தப்பிச் சென்ற அந்த நபர், பின்னர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தனது உயிரை தானே மாய்த்துக் கொண்டது விசாரணையில் தெரியவந்தது. படுகாயமடைந்த அந்த இளம் தாய் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மரண பயத்திலும் தனது குழந்தையைக் காப்பாற்றிய அவரது தாய்மை உணர்வு சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ வைத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.