“ப்ளீஸ் அவரை விட்ருங்க…” அடிக்க விடாமல் தடுத்த பெண்… பில் கட்ட சொல்லி நடுரோட்டில் தாக்கிய ஏஜெண்ட்கள்… பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on சித்திரை 29, 2026

Spread the love

புனேவில் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைச் செலுத்தாத நபர் ஒருவரை, வங்கி ஏஜெண்ட்கள் நடுரோட்டில் வைத்துத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரை வழிமறித்த மூன்று வசூல் முகவர்கள், உடனடியாகப் பணத்தைக் கட்டச் சொல்லி வற்புறுத்தியதோடு மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டனர். அங்கிருந்த பெண் ஒருவர் அவர்களைத் தடுத்து நிறுத்தப் போராடியும், அதைப் பொருட்படுத்தாத அந்த கும்பல் அந்த நபரைச் சரமாரியாக அடித்து உதைத்துத் தங்களது அராஜகத்தைக் காட்டியுள்ளது.

வங்கிகள் கடன் வசூலிப்பதற்கு ஏஜெண்ட்களைப் பயன்படுத்தி அச்சுறுத்துவதைத் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஏற்கனவே கண்டிப்புடன் தடை செய்துள்ளது. அத்தகைய விதிகள் அமலில் இருக்கும்போதே, பொதுவெளியில் அரங்கேறிய இந்த வன்முறைச் செயல் சட்டத்தை மீறிய செயலாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஏஜெண்ட்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.