பேயா…? இல்ல மெண்டல் ஹெல்த் பிரச்சனையா…? விசித்திரமாக சத்தம் போட்டு சுவரில் ஏற முயன்ற சிறுமி… ஹாஸ்பிடலில் பகீர் சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on சித்திரை 29, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ராவத்பாட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமி ஒருவரின் வினோதச் செயல் அங்கிருந்தவர்களை உறைய வைத்துள்ளது. உடல்நலக்குறைவால் வார்டில் சிகிச்சை பெற்று வந்த அந்தச் சிறுமி, திடீரென சுவர்களில் ஏற முயன்றதோடு விசித்திரமான சத்தங்களையும் எழுப்பியுள்ளார். ஹாரர் திரைப்படக் காட்சி போல அந்தச் சிறுமி செய்த இந்த மிரட்டலான காரியங்கள் அங்கிருந்த நோயாளி மற்றும் உறவினர்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், அந்தச் சிறுமிக்கு பேய் பிடித்துள்ளதாகக் கூறி வருகின்றனர். ஆனால், மருத்துவம் மற்றும் மனநல நிபுணர்கள் இது தீவிரமான மனநலம் சார்ந்த பாதிப்பாகவோ அல்லது நரம்பியல் கோளாறாகவோ இருக்கலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். ஆன்மீக ரீதியான நம்பிக்கைகளுக்கும் அறிவியல் ரீதியான காரணங்களுக்கும் இடையே இந்தச் சம்பவம் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.