கொஞ்சம் கூட பயமே இல்லையா…? ஆசிரியரை அடித்து எட்டி உதைத்த மாணவன்…. சுற்றி நின்று கத்திய மக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on சித்திரை 29, 2026

Spread the love

சரன் நகர் பனாட் பகுதியில் ஆசிரியரை மாணவர் ஒருவர் நடுரோட்டில் வைத்துத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியரை பின்னால் இருந்து தாக்கிய அந்த மாணவர், அவரை மிகக் கொடூரமாக அடித்துள்ளார். குரு என்றும் பாராமல் பொதுவெளியில் மாணவர் அரங்கேற்றிய இந்த வன்முறைச் செயல் அங்கிருந்தவர்களை நிலைகுலையச் செய்துள்ளது.

ஆசிரியரைத் தடுத்துக் காப்பாற்ற வந்த பொதுமக்களையும் அந்த மாணவர் விட்டுவைக்காமல் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது. ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய இந்த விவகாரம் குறித்துப் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.