ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள ரியான் பராக், வீரர்கள் தங்கும் ஓய்வறையில் (Dressing Room) மின்னணு சிகரெட் (E-Cigarette) பயன்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோ வெளியாகி விளையாட்டு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது, ஆட்டமிழந்து வெளியேறிய ரியான் பராக், தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக இவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரிகிறது. இந்தியாவில் மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால், இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
Yep.
He is vaping inside the stadium https://t.co/mXjkNPvV5N— ` (@eswargod) April 28, 2026
ஒரு அணியின் கேப்டனாக இருந்து கொண்டு, இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய வீரர் இத்தகைய ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கான நடத்தை விதிகளின்படி, மைதானம் மற்றும் ஓய்வறைகளில் போதை அல்லது தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது கடுமையான குற்றமாகும். இதனால் ரியான் பராக் மீது பிசிசிஐ (BCCI) மற்றும் ஐபிஎல் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
