“இரண்டு குழந்தைகள் அவசியம்…” அதற்கு மேல் என்றாலும்…! மக்கள் தொகை குறித்த நிலைப்பாட்டை மாற்றிய சந்திரபாபு நாயுடு…!!

By Devi Ramu on சித்திரை 27, 2026

Spread the love

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்கள் தொகை மேலாண்மை குறித்து முக்கியமான கருத்து ஒன்றைப் பகிர்ந்துள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் தொகையைக் குறைக்கப் பாடுபட்ட தான், தற்போது நிலவும் சூழலைக் கருதி தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாகத் தெரிவித்தார். தென்னிந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும், இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதையும் சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலச் சவால்களைச் சமாளிக்க மக்கள் தொகை சமநிலை அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சீனா போன்ற நாடுகள் ‘ஒரு குழந்தை’ கொள்கையால் தற்போது சந்தித்து வரும் மக்கள் தொகைச் சரிவை உதாரணமாகக் காட்டிய அவர், ஒவ்வொரு தம்பதியினரும் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை ஒரு குடும்பம் பெற்றுக் கொள்வதை தான் மனதார வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார். மக்கள் தொகை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள இந்தத் தேக்கநிலை நீடித்தால், வரும் காலங்களில் சமூக மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.