தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களை முறையாகக் குறிப்பிடவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தனது மனைவி சங்கீதாவிற்கு 12.6 கோடி ரூபாய் கடன் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ள தகவல்களில் பெரும் முரண்பாடுகள் இருப்பதாகவும், இது தொடர்பாக வருமான வரித்துறை விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் வெங்கடேஷ் தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு இன்று (ஏப்ரல் 27) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேட்புமனுவில் தவறான தகவல்களை அளிப்பது தேர்தல் விதிகளின்படி கடுமையான குற்றமாகக் கருதப்படுவதால், மனுதாரர் தரப்பில் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் விஜய்க்குத் தேர்தல் ரீதியாகப் பெரும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பே எழுந்துள்ள இந்தச் சொத்து விவகாரம், தவெக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
