“மாறப்போகும் தமிழ்நாட்டின் தலையெழுத்து” தவெக-வால் திமுக, அதிமுகவுக்கு செக்… பாஜகவுக்கு ஜாக்பாட்… அர்ஜுனமூர்த்தி வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரம்..!!

By Soundarya on சித்திரை 27, 2026

Spread the love

தமிழக பாஜகவின் தொண்டு நிறுவனப் பிரிவு அமைப்பாளர் அர்ஜுனமூர்த்தி, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஏற்படுத்தப்போகும் தாக்கம் மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாய்ப்புகள் குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். தவெக உருவாக்கப்போகும் வாக்கு பிளவு, பல தொகுதிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்றும், இதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு பலமான கூட்டணி ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் 1977-ஆம் ஆண்டு முதல் இன்றைய வரையிலான தேர்தல் வரலாற்றை புள்ளிவிவரங்களுடன் அர்ஜுனமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார். வாக்காளர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், அதற்கு இணையாக வாக்குப்பதிவு அதிகரிக்கவில்லை என்பதை அவர் தரவுகளுடன் விளக்கியுள்ளார். உதாரணமாக, 1991-இல் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிந்தைய சூழலில் 22 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்தும் வாக்குப்பதிவு 6 லட்சம் குறைந்ததையும், அதேபோல் 1989 மற்றும் 2001 ஆண்டுகளில் நிலவிய மாற்றங்களையும் அவர் ஒப்பீடாக முன்வைத்துள்ளார்.

   

புள்ளிவிவரங்கள் ஒருபுறம் இருந்தாலும், மக்களின் மனநிலையும் புதிய அரசியல் சக்திகளுமே தேர்தல் முடிவுகளை மாற்றும் வல்லமை கொண்டவை என்று அவர் தெரிவித்துள்ளார். வரும் 2026 தேர்தல் என்பது தமிழக அரசியலில் ஒரு புதிய ‘கூட்டணி ஆட்சி’ காலத்தின் தொடக்கமாக அமையும் என்று அவர் கணித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் வரவு மற்றும் தற்போதைய அரசியல் சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, இது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சாதகமான சூழலை உருவாக்கும் என்று தனது அறிக்கையில் அர்ஜுனமூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.