“மே 4-ல் சம்பவம் இருக்கு!” – வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு சீக்ரெட் உத்தரவு போட்ட விஜய்… கதிகலங்கிய அரசியல் கட்சிகள்…!

By Nanthini on சித்திரை 26, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 62 மையங்களிலும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டுமெனத் தனது கட்சியினருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு அறையை (Strong Room) நேரில் ஆய்வு செய்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காணொலி வாயிலாக வேட்பாளர்களுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அதன்படி, ஒவ்வொரு மையத்திலும் சுழற்சி முறையில் 8 மணி நேரத்திற்கு ஒருமுறை தலா 14 பேர் எனத் தன்னார்வலர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும், வரும் மே 4-ஆம் தேதி விஜய் தமிழக முதல்வராவது உறுதி என்றும் அவர் மிகுந்த நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.