ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, பந்தைத் தடுக்க முயன்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மைதானத்திற்குள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். இங்கிடியை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக டெல்லி காவல்துறை ‘பச்சை வழித்தடத்தை’ (Green Corridor) உருவாக்கி, போக்குவரத்து சிக்னல்களைச் சீரமைத்து உதவியது. இதன் விளைவாக, வெறும் 11 நிமிடங்களிலேயே அவர் மருத்துவமனையைச் சென்றடைந்தார்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லுங்கி இங்கிடியின் உடல்நிலை குறித்து டெல்லி அணி நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவர் தற்போது சீரான உடல் நிலையில் இருப்பதாகவும், உரிய சிகிச்சைகளுக்குப் பிறகு விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் அவரது ரசிகர்கள் மற்றும் சக வீரர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த டெல்லியில், ஒரு உயிரைக் காக்க துரிதமாகச் செயல்பட்ட காவல் துறையினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
