மத்திய அரசுக்குச் சொந்தமான தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் (SECL) ‘கிரேடு சி’ பிரிவின் கீழ் காலியாக உள்ள 1,055 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மைனிங் சிதார், அசிஸ்டெண்ட் போர்மேன் (எலெக்ட்ரிக்கல்) மற்றும் துணை சர்வேயர் போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிப்ளமோ, பி.இ. அல்லது பி.டெக் போன்ற கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். 08.04.2026 அன்றைய தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்; இருப்பினும், அரசு விதிமுறைப்படி மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படுகிறது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் இந்தப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் secl-cil.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி மே 14, 2026 ஆகும். நிலக்கரித் துறையில் மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் தகுதியான இளைஞர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும் என்பதால், காலக்கெடு முடிவதற்குள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
