தேர்தல் முடிஞ்சாச்சு… வெற்றி வாய்ப்பு எப்படி.? ரகசிய சிக்னலை காட்டிய முதல்வர் ஸ்டாலின்… மீண்டும் திமுக ஆட்சியா.?

By Soundarya on சித்திரை 25, 2026

Spread the love

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காகத் தனது குடும்பத்தினருடன் மதுரை வழியாகக் கொடைக்கானல் சென்றுள்ளார். முன்னதாக மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு, சபாநாயகர் அப்பாவு மட்டும் வரவேற்பு அளித்தார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்துக் கேட்ட கேள்விக்கு, “சூப்பராக உள்ளது” எனத் தன்னம்பிக்கையுடன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டி (Thumps Up) உற்சாகமாகப் பதிலளித்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

வழக்கமாகத் தேர்தல் பணிகள் முடிந்த பிறகு கொடைக்கானலில் ஓய்வெடுப்பதை முதல்வர் ஸ்டாலின் வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த 2019, 2021 மற்றும் 2024 ஆகிய தேர்தல்களுக்குப் பின்னரும் அவர் அங்குச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை கொடைக்கானலில் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை தங்கி ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ள அவர், தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடவுள்ளார். இதற்காக மதுரை விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் யாரும் திரண்டு வர வேண்டாம் என முன்னரே அறிவுறுத்தப்பட்டிருந்தது.